தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹாசனாம்பா கோவில் திருவிழாவுக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா திட்டம்

ஹாசனாம்பா கோவில் திருவிழாவுக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா திட்டம்

ஹாசனாம்பா கோவில் திருவிழாவுக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா திட்டம்


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஹாசனாம்பா திருவிழாவை ஒட்டி, பெங்களூரு, மைசூரில் இருந்து, 10 சிறப்பு சுற்றுலா திட்டங்களை, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா கோவிலில் வரும் 30ம் தேதி முதல் நவ., 10ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. இவ்விழாவுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணியருக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம், 10 சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 8:00 மணிக்கு புறப்படும் கர்நாடக சாரிகே பஸ், ஹாசனாம்பா, சித்தேஸ்வரா கோவில், தேவிகெரே கல்யாணி, கென்சம்மா கோவில், ஹொசகோட்டேக்கு பின் மீண்டும் ஹாசன் நகருக்கு வந்தடையும். ஒருவருக்கு 1,400 ரூபாய் கட்டணம்

 பெங்களூரு கெம்பே கவுடா பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை 6:00 மணிக்கு புறப்படும் வால்வோ

பஸ், ஹாசனாம்பா, சித்தேஸ்வரா கோவில், தேவிகெரே கல்யாணி வழியாக மீண்டும் பெங்களூரு வந்தடையும். ஒருவருக்கு 2,500 ரூபாய் கட்டணம்

 பெங்களூரு கெம்பே கவுடா பஸ் நிலையத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் அஸ்வமேதா பஸ், ஹாசனாம்பா, சித்தேஸ்வரா கோவில், தேவிகெரே கல்யாணி வழியாக மீண்டும் பெங்களூரு வந்தடையும். ஒருவருக்கு 2,000 ரூபாய் கட்டணம்

 மைசூரு சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் வால்வோ பஸ், ஹாசனாம்பா, சித்தேஸ்வரா கோவில், தேவிகெரே கல்யாணி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ஹொளேநரசிபுரா வழியாக மீண்டும் மைசூரு வரும். ஒருவருக்கு 2,000 ரூபாய்

 மைசூரு சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் அஸ்வமேதா பஸ், ஹாசனாம்பா, சித்தேஸ்வரா கோவில், தேவிகெரே கல்யாணி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ஹொளேநரசிபுரா வழியாக மீண்டும் மைசூரு வந்தடையும். ஒருவருக்கு 1,600 ரூபாய் கட்டணம்

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து, காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், வடேஹொளே அணை, ஜனார்த்தன சுவாமி கோவில், பாளையா, மரகடி நீர்வீழ்ச்சி, பெட்டத பைரேஸ்வர சுவுாமி கோவில் வழியாக மீண்டும் ஹாசன் வந்தடையும். ஒருவருக்கு 500 ரூபாய்

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், மன்ஞாரபாத் கோட்டை, மூகனமனே நீர்வீழ்ச்சி, பிஸ்லே காட் வியூ பாயின்ட் வழியாக மீண்டும் ஹாசன் வந்தடையும். ஒருவருக்கு 525 ரூபாய்

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், சென்னகெசவா கோவில், பேலுார் வாட்டர் அட்வென்சர் சென்டர், யகசி, புஷ்பகிரி மல்லிகார்ஜுன சுவாமி கோவில், ஹொய்சாலேஸ்வரா கோவில், ஹலேபீடு, வரதரா சுவாமி கோவில், கொண்டஜி வழியாக ஹாசன் வந்தடையும். ஒருவருக்கு 375 ரூபாய்

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், நுக்கேஹள்ளி, ஸ்ரவணபெலகோலா, வித்யாகிரி மலை, சந்திரகிரி மலை, பெலசிந்தா பூங்கா வழியாக மீண்டும் ஹாசன் வந்தடையும். ஒருவருக்கு 400 ரூபாய்

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், பூச்சேஸ்வரா கோவில், கோரவங்கலா, கேசவா, சோமேஸ்வரா கோவில், ஹரனஹள்ளி, மலேகல்லு திருப்பதி கோவில், ஜேனுகல்லு சித்தேஸ்வரா கோவில், மஹாத்மா காந்தி நினைவகம், அரிசிகெரே, நரசிம்ம சுவாமி கோவில், சாந்திகிராமா, கன்டேகட்டே வனம், ஹாசன் தொல்லியல் துறை அருங்காட்சியகம் வழியாக மீண்டும் ஹாசன் வந்தடையும். ஒருவருக்கு 400 ரூபாய்

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், ஹலுவகிலு கட்லே, ஷெட்டிஹள்ளி சர்ச், ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில், கோனபுரா, ஹெமாவதி அணை, கோரூர், சுப்ரமண்ய சுவாமி கோவில், ராமநாதபுரா, ராமேஸ்வரம் கோவில் வழியாக மீண்டும் ஹாசன் வந்தடையும். ஒருவருக்கு 400 ரூபாய்

 ஹாசன் நகர பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ஜவகல், சென்னகேசவா கோவில், அரகெரே, ரங்கநாத சுவாமி கோவில், பெட்டதபுரா, பானவாரா கோட்டை, ரங்கநாத சுவாமி கோவில், பிலிகல்லு வழியாக மீண்டும் ஹாசன் வந்தடையும். ஒருவருக்கு 500 ரூபாய்

உணவு, சுற்றுலா தலம் சுற்றிப்பார்ப்பதற்கான நுழைவு கட்டணம் அனைத்தும் இந்த பாக்கேஜில் அடங்கும். இந்த சுற்றுலா அனைத்தும் இரவு 8:00 மணிக்குள் புறப்பட்ட இடத்திலேயே இறக்கி விடப்படுவர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us