/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லட்சுமி ஹெப்பால்கர் கார் விபத்து 3 மாதத்துக்கு பின் ஓட்டுநர் கைது
/
லட்சுமி ஹெப்பால்கர் கார் விபத்து 3 மாதத்துக்கு பின் ஓட்டுநர் கைது
லட்சுமி ஹெப்பால்கர் கார் விபத்து 3 மாதத்துக்கு பின் ஓட்டுநர் கைது
லட்சுமி ஹெப்பால்கர் கார் விபத்து 3 மாதத்துக்கு பின் ஓட்டுநர் கைது
ADDED : ஏப் 17, 2025 06:50 AM

பெலகாவி : ஜனவரியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கார் விபத்துக்குள்ளாக காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், ஜனவரி 14 ம் தேதி பெலகாவி மாவட்டம் சின்னம்மா கித்துாரின் தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது லாரி ஒன்று இவரின் வாகனத்தின் மோதி விட்டு சென்றது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹெப்பால்கரின் கார் ஓட்டுநர் அளித்த புகாரின்படி, கத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வந்தனர்.
ஹிரேபாகேவாடி சுங்கச்சாவடியில் பதிவான லாரி எண்ணை கொண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயின் இந்தாபுராவின் தக்ரவாடி கிராமத்தை சேர்ந்த மதுகர் கொண்டிராம் சோமவன்ஷ், 65, என்பவரை கைது செய்து, நேற்று பெலகாவி அழைத்து வந்தனர்.
லாரியை போலீசார் கைப்பற்றினர். கைதான ஓட்டுநர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.