/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லாரி மோதி பாதசாரி பலி 32 ஆண்டுக்கு பின் ஓட்டுநர் கைது
/
லாரி மோதி பாதசாரி பலி 32 ஆண்டுக்கு பின் ஓட்டுநர் கைது
லாரி மோதி பாதசாரி பலி 32 ஆண்டுக்கு பின் ஓட்டுநர் கைது
லாரி மோதி பாதசாரி பலி 32 ஆண்டுக்கு பின் ஓட்டுநர் கைது
ADDED : ஜன 30, 2026 06:30 AM

தாவணகெரே: சாலையில் சென்ற நபரின் இறப்புக்கு காரணமான, லாரி ஓட்டுநரை 32 ஆண்டுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.
தாவணகெரே மாவட்டம், ஜகளூர் தாலுகாவின் கல்லேதேவனபுரா கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை - 13ல், வேகமாக சென்ற லாரி, சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் 1994ல் நடந்தது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஜகளூர் போலீசார், லாரி ஓட்டுநர் யார் என்பதை விசாரித்த போது, கங்காதரப்பா, 67, என்பது தெரிந்தது. சம்பவத்துக்கு பின் அவர் தலைமறைவானதால், போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்டுக்கணக்கில் தேடி சலித்து போய் விட்டனர். சமீபத்தில் முடிக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்ட பழைய வழக்குகளை கண்டுபிடிக்க, போலீசார் முடிவு செய்தனர்.
பாதசாரி மீது மோதி, அவரது இறப்புக்கு காரணமான லாரி ஓட்டுநர் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அவரை கண்டுபிடிக்க சபதம் செய்தனர். தொடர்ந்து தேடியதில் ஹாசன் மாவட்டம், அரசிகெரேவில் இருப்பதை கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
லாரி ஓட்டுநரை 32 ஆண்டுக்கு பின், கைது செய்தது குறிப்பிடத்தக்கது. பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்; நீதிமன்றமும் அவரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.

