பக்கத்து வீட்டு பெண்ணை கட்டி பிடித்த டிரைவர் கைது
பக்கத்து வீட்டு பெண்ணை கட்டி பிடித்த டிரைவர் கைது
ADDED : மே 07, 2026 10:57 PM
சங்கரபுரா: பக்கத்து வீட்டு பெண்ணை கட்டி பிடித்ததுடன், தட்டி கேட்ட அவரது கணவரை அரிவாளால் தாக்கிய, கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு சங்கரபுரா ரங்கராவ் சாலையில் வசிப்பவர் கிரிஷ் ஜெயின். இவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் உள்ள இரண்டு வீடுகளில், காவலாளி நந்திஷ், கார் டிரைவர் புட்டராஜ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.
நந்திஷ் மனைவி மீது புட்டராஜ் கண் வைத்தார். நேற்று முன்தினம் இரவு நந்திஷின் மனைவி வீட்டின் சமையல் அறையில் பாத்திரம் கழுவி கொண்டு இருந்தார்.
இந்நிலையில், வீட்டிற்குள் நைசாக புகுந்த புட்டராஜ், சமையல் அறைக்கு சென்று, நந்திஷ் மனைவியை பின்பக்கமாக கட்டி பிடித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டதால், வீட்டில் இருந்த கணவர் அங்கு வந்தார்.
புட்டராஜை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என்று மனைவியிடம் கேட்ட போது, தன்னை கட்டி பிடித்ததாக கூறினார். கோபம் அடைந்த நந்திஷ், அரிவாளை எடுத்து வந்து, புட்டராஜை வெட்ட முயன்றார்.
சுதாரித்து கொண்ட புட்டராஜ், நந்திஷை தோசை கல்லால் தாக்கியதுடன், அரிவாளை பிடுங்கி அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பினார். தம்பதி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சங்கரபுரா போலீசார், புட்டராஜை கைது செய்தனர்.
