ADDED : மே 03, 2026 11:37 PM
அ நிறம் | அளவு
ஜே.ஜே.நகர்: வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்திய தகராறில், டிரைவரை அடித்து கொன்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ஜே.ஜே.நகர் 9வது மெயின் ரோட்டில் வசித்தவர் முபாரக், 26; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு சபாரி முடிந்ததும், வீட்டிற்கு வந்தார். ஆட்டோவை பக்கத்து வீட்டில் வசிக்கும் தப்ரேஸ், 30 வீட்டின் முன்பு நிறுத்தினார்.
அங்கு வந்த தப்ரேஸ் ஆட்டோவை வேறு இடத்தில் நிறுத்தும்படி கூறியதால் அவருக்கு, முபாரக்கிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபம் அடைந்த தப்ரேஸ் அங்கிருந்த மரப்பலகையை எடுத்து, முபாரக் தலையில் அடித்தார்.
சரிந்து விழுந்து உயிருக்கு போராடியவரை குடும்பத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை முபாரக் இறந்தார். தப்ரேஸ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
