தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பஸ் ஓட்டிய ஓட்டுநர்

 போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பஸ் ஓட்டிய ஓட்டுநர்

 போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பஸ் ஓட்டிய ஓட்டுநர்


ADDED : செப் 25, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால்: பயணியரை அழைத்து சென்ற அரசு பஸ்சின் இரண்டு ஹெட் லைட்டுகளும் பழுதடைந்தன. ஓட்டுநர் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், இருட்டான சாலையில் பஸ் ஓட்டினார்.

கொப்பால் டிப்போவை சேர்ந்த கே.கே.ஆர்.டி.சி., எனும் கல்யாண கர்நாடகா போக்குவரத்துக்கழக பஸ், நேற்று முன்தினம் இரவு, கொப்பாலில் இருந்து ஷஹாபுராவுக்கு புறப்பட்டது.

பஸ்சில் பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பாதி வழியில் வரும் போது, தொழில்நுட்ப கோளாறால், பஸ்சின் இரண்டு ஹெட் லைட்டுகளும் திடீரென எரியவில்லை.

மழை பெய்ததாலும், இருட்டாக இருந்ததாலும் சாலை சரியாக தெரியவில்லை. இத்தகைய அபாயமான சூழ்நிலையில், பஸ்சை அருகில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதற்கு பதில், பயணியரின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், இருட்டான சாலையில், டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றார்.

பயணியர் உயிரை கையில் பிடித்தபடி, பயத்தில் அமர்ந்திருந்தனர். அந்த அடாவடி ஓட்டுநர் பற்றி பயணி ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பலரும் ஓட்டுநரை கண்டித்தனர். ஹெட் லைட்டுகள் இல்லாத பஸ்சில், பயணியரை அழைத்து வந்தது தவறு என, கருத்து தெரிவித்தனர்.

இது போல, பல இடங்களில் நடந்துள்ளது. ஆனால், அரசு எச்சரிக்கை அடையவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us