/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணுக்காக சண்டை டிரைவருக்கு கத்திக்குத்து
/
பெண்ணுக்காக சண்டை டிரைவருக்கு கத்திக்குத்து
ADDED : பிப் 04, 2026 06:20 AM
கே.ஆர்.புரம்: பெண்ணுக்காக நடந்த சண்டையில், டிரைவருக்கு கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. நான்கு பேரை போலீஸ் தேடுகிறது.
பெங்களூரு கே.ஆர்.புரம் தேவசந்திராவில் வசிப்பவர் ரோஷன், 25; டிரைவவ். இவரது நண்பர் மாமு, 26. தேவசந்திராவில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டில் வேலை செய்யும், நேபாளத்தை சேர்ந்த இளம்பெண்ணை ரோஷனும், மாமுவும் காதலித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இ ளம்பெண்ணை யார் காதலிப்பது என்பது பற்றி பேசி முடிவு எடுக்க, ரோஷனை நேற்று முன்தினம் இரவு மாமு அழைத்தார்.
பேச்சுவார்த்தையின் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
மாமுவின் நண்பர்கள் வாசிம், 22, யாசிப், 24, கலீம், 25 ஆகியோர், ரோஷன் கை, கால்களை பிடித்து கொண்டனர்.
ரோஷன் கழுத்தில் மாமு கத்தியால் குத்தினார். பின், நான்கு பேரும் அங்கிருந்து தப்பினர்.
உயிருக்கு போராடிய ரோஷனை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரோஷன் குடும்பத்தினர் அளித்த புகாரில், மாமு உட்பட நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த, கே.ஆர்.புரம் போலீசார் நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

