/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் வருகை
/
டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் வருகை
ADDED : டிச 23, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: காளேன அக்ரஹாரா - நாகவாரா வழித்தடத்தில் இயங்க உள்ள, டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் பெட்டிகள், கொத்தனுார் பணிமனைக்கு வந்து உள்ளது.
பெங்களூரின் காளேன அக்ரஹாரா - நாகவாரா இடையில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் முடிந்து உள்ளது. இந்த பாதையில் இயங்குவதற்காக, டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஒரு ரயிலுக்கான 6 பெட்டிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பி.இ.எம்.எல்., வளாகத்திற்குள் சோதனை ஓட்டம் நடந்தது .
இந்நிலையில் நேற்று ஆறு பெட்டிகளும், தனிதனி கன்டெய்னர் லாரி மூலம் கொத்தனுார் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. வரும் நாட்களில் இங்கிருந்து சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.

