/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாடகை காரில் பயணிப்போருக்கு டிரைவரின் அறிவுரை போஸ்டர்
/
வாடகை காரில் பயணிப்போருக்கு டிரைவரின் அறிவுரை போஸ்டர்
வாடகை காரில் பயணிப்போருக்கு டிரைவரின் அறிவுரை போஸ்டர்
வாடகை காரில் பயணிப்போருக்கு டிரைவரின் அறிவுரை போஸ்டர்
ADDED : நவ 25, 2025 05:55 AM
பெங்களூரு: பெங்களூரில் டாக்சி ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை, 'குளூலஸ் பவுன்டர்' என்ற பெயர் உள்ளவர் 'ரெடிட்' சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
போஸ்டரில், 'நீங்கள் காரின் உரிமையாளர் அல்ல. வாகனத்தை ஓட்டுபவரே காரின் உரிமையாளர். ஓட்டுநரிடம் பணிவு, மரியாதையுடன் பேச வேண்டும்.
கதவை பொறுமையாக மூடவும். காருக்குள் ஏறியதும், தங்கள் நடத்தையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
'ஏனெனில், நீங்கள் எஜமானர்கள் அல்ல. வாகனத்தை வேகமாக ஓட்டு; 'பையா' என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.