/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடைபாதையில் பைக் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும்
/
நடைபாதையில் பைக் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும்
நடைபாதையில் பைக் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும்
நடைபாதையில் பைக் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும்
ADDED : பிப் 04, 2025 06:41 AM
பெங்களூரு: நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போலீசார் பல கட்டுப் பாடுகளை விதித்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள், அவற்றை மீறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இப்படி போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், நடைபாதையில் வாகனம் ஓட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து போலீசார் அபராத தொகையை வசூலிக்கின்றனர்.
இருப்பினும், அவர்கள் மீண்டும் அதையே செய்கின்றனர். இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் பலர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் எம்.என்.அனுசேத் கூறியதாவது:
நடைபாதையில் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது. எனவே, வாகன ஓட்டிகள் நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறி, நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்.
மீண்டும் இதேபோன்று செய்தால், ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். இந்த புதிய விதியின் மூலம் விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.