ADDED : ஆக 31, 2025 06:24 AM
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, செப்., 29, 30ம் தேதிகளில் ட்ரோன் ஒத்திகையும், அக்., 1, 2ல் ட்ரோன் கண்காட்சியும் நடத்த மைசூரு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மைசூரு விஜயநகராவில் உள்ள சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவன அலுவலகத்தில், கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தலைமையில் தசரா விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் பேசிய தாவது:
மைசூரு தசராவை முன்னிட்டு, நகரில் மின் விளக்கு அலங்காரத்துடன், 'ட்ரோன ் ' கண்காட்சியை சிறப்பாக நடத்த வேண்டும். பன்னிமண்டபம் பரேடு மைதானத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடக்க உள்ளது. செப்., 28, 29ல் ட்ரோன் கண்காட்சி ஒத்திகையும்; அக்., 1, 2ல் ட்ரோன் கண்காட்சியும் நடக்கும்.
நிறைவு நாளில் அதே மைதானத்தில் போலீசாரின் தீப்பந்த சாகச நிகழ்ச்சியும் நடப்பதால், இம்மூன்று நிகழ்ச்சிகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில், ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

