/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரில் குற்றங்களை தடுக்க 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு
/
மைசூரில் குற்றங்களை தடுக்க 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு
மைசூரில் குற்றங்களை தடுக்க 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு
மைசூரில் குற்றங்களை தடுக்க 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு
ADDED : பிப் 21, 2026 04:32 AM

மைசூரு: மைசூரில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும், ட்ரோன் வாயிலாக கண்காணிக்கும் பணியை, மாநகர போலீசார் துவக்கி உள்ளனர்.
கலாசார நகரமான மைசூருக்கு, ஆண்டுதோறும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இது தவிர, மைசூரு நகரில், 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றன.
அதனால், நகரில் மிகவும் பதற்றமான பகுதிகளை கண்காணிப்பதும், பாதுகாப்பு வழங்குவதும் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. சமீப நாட்களாக போதைப்பொருள் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்தும் வகையில், உதயகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அல்-பிரதர் சதுக்கம், நிம்ரா மஸ்ஜித்; மண்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கைலாசபுரம், சன்னி சவுக் பகுதிகளில், மாநகர போலீசார், நேற்று முன்தினம் முதல், 'ட்ரோன்' மூலம் கண்காணிக்கும் பணியை துவக்கி உள்ளனர்.
உதயகிரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, போதைப்பொருள் அதிக புழக்கம் இருக்கும் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கல்லுாரி அருகே சோதனை நடத்தப்பட்டது.
இனி இப்பகுதிகளை ட்ரோன் மூலம் தினமும் காலையும், இரவும் தலா 40 நிமிடங்கள் போலீசார் கண்காணிப்பர். வரும் நாட்களில் நகரில் நடக்கும் பல்வேறு பாதுகாப்பு பணிகள், பொதுக்கூட்டங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிற நடவடிக்கைகளின் போதும், ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
பொது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
... புல் அவுட் ...
மைசூரு நகரின் அமைதி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தற்போது, ட்ரோன் கேமரா செயல்பாடுகள் துவங்கப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்துவதால், குறுகிய காலத்தில் கூடுதல் தகவல்கள் பெற உதவும். பிற குற்றங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
- சீமா லட்கர்,
மைசூரு நகர போலீஸ் கமிஷனர்

