/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., ரூரல் மாவட்டத்தில் ட்ரோன் பயன்படுத்த தடை
/
பெங்., ரூரல் மாவட்டத்தில் ட்ரோன் பயன்படுத்த தடை
ADDED : மே 18, 2025 06:35 AM

பெங்களூரு: ''பயங்கரவாத தாக்குதல், தேச விசோத சக்திகளின் அச்சுறுத்தல் விடுக்க வாய்ப்பு உள்ளதால், மாவட்டத்தில் முக்கிய இடங்களில், பொது மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் பறக்க விடவும், பாரா கிளைடிங் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என, பெங்களூரு ரூரல் மாவட்ட கலெக்டர் பசவராஜு தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் தணிந்துள்ளது. ஆனாலும், மாவட்டத்தின் முக்கிய இடங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது.
பயங்கரவாத தாக்குதல், தேசவிரோத சக்திகளின் அச்சுறுத்தல் விடுக்க வாய்ப்பு உள்ளதால், மாவட்டத்தில் முக்கிய இடங்களில், பொது மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் பறக்கவும், பாரா கிளைடிங் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக ட்ரோன்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் பாதுகாப்பு அளிக்கும், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அசம்பாவிதம் நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸ் துறைக்கும்; சமூக வலைதளங்களில் போலி செய்திகளை வெளியிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம், தாலுகா மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது.
சமூக தலைவர்கள், பிற முக்கிய பிரமுகர்கள் வாட்ஸாப் குழுக்கள் செயலியில் பொய், வதந்திகள் கண்டறியப்பட்டால், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறையின் 080 - 2838 8005 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.