தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 'ட்ரோன்'கள்

 போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 'ட்ரோன்'கள்

 போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 'ட்ரோன்'கள்


ADDED : செப் 30, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், 'ட்ரோன்'கள் மூலமாக கண்காணிக்க, பெங்களூரு போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். நகரின் பிரதான சாலைகளில், வாகன பயணியர் தினமும் எதிர்கொள்ளு ம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.

பெங்களூரில் மிகவும் அதிகமான வாகன நெரிசல் உள்ள இடங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு போக்குவரத்து சூழ்நிலையை கண்காணிக்க, ட்ரோன்கள் பயன்படுத்துகிறோம்.

இத்திட்டத்துக்காக, நகரின், 10 போக்குவரத்து துணை மண்டலங்களுக்கு, தலா ஒன்று வீதம் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து போலீசார், சாலைகளில் போக்குவரத்து சூழ்நிலையை பார்வையிடுகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிகமாக பயணிக்கும் சாலைகளில், காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க, ட்ரோன்கள் உதவியாக உள்ளன.

பிரதான சாலைகள், மேம்பாலங்கள், முக்கியமான சந்திப்புகளில், வாகனங்கள் செல்வதை ட்ரோன் மூலமாக பார்த்து, நெரிசல் ஏற்படும் முன்பே அதை சரி செய்ய, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பர்.

ட்ரோன் உதவியுடன் கண்காணிப்பதால், சாலையில் வாகனங்கள் பழுதடைந்து நின்றால் அல்லது விபத்து ஏற்பட்டால், உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைக்கும். அந்த இடத்துக்கு சென்று, மாற்று பாதை வசதி செய்யப்படும்; பயண நேரமும் மிச்சமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us