தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேற்கு மாநகராட்சி பட்ஜெட்டுக்கான துளிகள்

 மேற்கு மாநகராட்சி பட்ஜெட்டுக்கான துளிகள்

 மேற்கு மாநகராட்சி பட்ஜெட்டுக்கான துளிகள்


ADDED : மார் 29, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முக்கால் மணி நேரம் வாசித்தார்

 மேற்கு மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் நிகழ்வு, மல்லேஸ்வரத்தில் உள்ள பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய பவனில் நடந்தது.

 பட்ஜெட் தாக்கல் செய்ய அதிகாரிகள் வருவதற்கு முன்னரே, ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் வந்தார். முதல் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார்.

 அதிகாரிகள் வந்ததும் சுரேஷ்குமாரிடம் உரையாடினர். அனைவரும் சகஜமாக சிரித்து பேசினர். பின், பட்ஜெட் தாக்கல் செய்ய அதிகாரிகள் மேடைக்கு சென்றனர். சுரேஷ்குமாரையும் அழைத்தனர். மேடையில் குறுகிய இடமே இருந்ததால், எம்.எல்.ஏ., செல்லவில்லை.

 பட்ஜெட் புத்தகத்தை எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், காங்கிரஸ் எம்.எல்.சி., சீத்தாராம் ஆர்வமாக படித்தனர்.

 மதியம் 12:45 மணிக்கு ஆரம்பித்து, 1.30 மணி வரை முக்கால் மணி நேரம், பட்ஜெட்டை கமிஷனர் ராஜேந்திரா வாசித்தார். பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து, தலைமை கமிஷனர் இரண்டு நிமிடம் பேசினார்.

 பட்ஜெட் தாக்கல் செய்வதை பார்க்க பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் வந்திருந்தனர். சில பெண்கள் ஆர்வமாக செல்பி எடுத்தனர்.

 வெயிலில் பயணம் செய்து பட்ஜெட் தாக்கலை பார்க்க வந்தவர்களுக்கு, குளுகுளுவென மாம்பழ ஜூஸ் வழங்கப்பட்டது.

 அதிகாரிகள், மக்கள், பத்திரிகையாளர்கள் இடத்திற்கே வந்து, மாநகராட்சி ஊழியர்கள் பட்ஜெட் புத்தகத்தை வினியோகம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us