தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பேன்சி ஸ்டோரில் போதை மாத்திரை விற்றவர் கைது

 பேன்சி ஸ்டோரில் போதை மாத்திரை விற்றவர் கைது

 பேன்சி ஸ்டோரில் போதை மாத்திரை விற்றவர் கைது


ADDED : மார் 16, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால்: வலி நிவாரண மாத்திரை என்ற பெயரில், போதை மாத்திரைகளை விற்பனை செய்த பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கொப்பால் மாவட்டம், கங்காவதி நகரின், துர்காதேவி கோவில் அருகில், 'கிருஷ்ணா பேன்சி ஸ்டோர்' என்ற பேன்சி ஸ்டோர் உள்ளது. இதனை கிஷன் குமார் என்பவர், நடத்தி வருகிறார். இங்கு சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரை விற்று வந்தார். ஆனால் இவை போதை மாத்திரைகளாகும்.

இளைஞர்கள் பலரும் இந்த மாத்திரைகளை விரும்பி வாங்கினர். இரண்டு மாத்திரைகளுக்கு 300 ரூபாயை கிஷன் குமார் வசூலித்துள்ளார். சில இளைஞர்கள் அதிக போதைக்காக, மாத்திரைகளை பொடியாக்கி, இன்ஜெக்ஷன் மூலமாக, நேரடியாக நரம்புகளில் குத்திக்கொள்கின்றனர். இது மிகவும் அபாயமானது.

கங்காவதி நகரின், லட்சுமி கேம்ப் பகுதியில் வசிக்கும் சங்கனகவுடா, 28, என்பவரும் பேன்சி ஸ்டோரில் போதை மாத்திரைகள் வாங்கி, பொடியாக்கி ஊசி மூலமாக உடலில் செலுத்தி கொண்டதில், அவரது உடல் நிலை பாதிப்படைந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் நிலைக்கு பேன்சி ஸ்டோரில் போதை மாத்திரை வாங்கி சாப்பிட்டதே காரணம். வலி நிவாரண மாத்திரை பெயரில், இத்தகைய அபாயமான போதை மாத்திரைகளை விற்கின்றனர். தன்னை போன்றே கங்காவதி நகரின் பல இளைஞர்கள், போதைக்கு அடிமையானதாக, கங்காவதி நகர போலீஸ் நிலையத்தில், சங்கனகவுடா புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து, நேற்று காலை கிராமத்துக்கு வந்த போலீசார், கிருஷ்ணா பேன்சி ஸ்டோரில் சோதனை நடத்தினர். போதை மாத்திரைகளை கைப்பற்றி, ஸ்டோர் உரிமையாளர் கிஷன் குமாரை கைது செய்தனர். போதை மாத்திரை விற்றதில், அப்பகுதி மெடிக்கல் ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே கிஷன் குமாரை தீவிரமாக விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us