தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாமியார் வேடத்தில் வந்து மருந்து கடையில் கொள்ளை

 சாமியார் வேடத்தில் வந்து மருந்து கடையில் கொள்ளை

 சாமியார் வேடத்தில் வந்து மருந்து கடையில் கொள்ளை


ADDED : மே 16, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 10:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: காவி உடை அணிந்து, சாமியார்களை போன்று நடித்து பொது மக்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் செயல்படுகிறது. உஷாராக இருக்கும்படி, போலீஸ் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கொள்ளையர்கள் சாமியார்கள் வேடத்தில் நடமாடுகின்றனர். பொது மக்களுக்கு நல்லது சொல்வது போன்று நடித்து, மயக்க மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து, பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து செல்கின்றனர். இதேபோன்ற சம்பவம், ராய்ச்சூரில் நடந்துள்ளது.

ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுார் தாலுகாவின், பிரதான சாலையில், 'சாயி மெடிக்கல்ஸ்' என்ற பார்மசி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், காவி உடை அணிந்த சாமியார் ஒருவர், அங்கு வந்தார். வெயிலில் களைத்து சோர்வடைந்த அவர், குடிக்க தண்ணீர் கேட்டார். மருந்து கடை உரிமையாளர் விஷ்ணுதத்து, குடிநீர் கொடுத்தார்.

தண்ணீர் குடித்த சாமி யார், கடை உரிமையாளரை புகழ்ந்தார். 'நீயும், உன் குடும்பமும் சுகமாக வா ழ்வீர்கள். உங்கள் கஷ்டங்கள் விலகும்' என, ஆசிர்வதித்து தன் கையில் இருந்த இரண் டு பூக்களை, விஷ்ணுதத்துவிட ம் கொ டுத்தார். சாமி யார் கொடுத்த பூக்களை முகர்ந்து பார்த்த சில விநாடிகளில், சு ய நினைவிழந்தார்.

தன்னை அறியா மல், தன் பாக்கெட்டில் இருந்த 10,000 ரூபாயையும், கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தையும் கழற்றி, சாமியாரிடம் கொடுத்தார். அதை பெற்று கொண்டு, அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

சிறிது நேரத்துக்கு பின், சுய நினைவுக்கு திரும்பிய விஷ்ணுதத்துவுக்கு, போலியான சாமியாரிடம், தான் ஏமாந்தது தெரிந்தது. சிந்தனுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் அங்கு சென்று, சாயி மெடிகல்ஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போதுதான் சாமியார் வேடத்தில், பல இடங்களில் கொள்ளை கும்பல் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தகைய திருட்டு கும்பல், ராய்ச்சூர் மட்டுமின்றி, மற்ற நகரங்களிலும் ஊ டுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமாக சாமியார்கள் நடமாடினால், உடனடியாக போலீசாருக்கு தெ ரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us