ADDED : மார் 29, 2026 03:34 AM
மைசூரு: மைசூரின் ஹுன்சூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 12 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரின் ஹுன்சூர் அருகேயுள்ள தாசனபுரா கிராமத்தில், போதை பொருளான மெத்தாம் பெட்டமைன் தயாரிக்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் நடத்திய சோதனையில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 7.35 கிலோ மெத்தாம் பெட்டமைன், 41 கிலோ போதை பொருள் தயாரிக்கும் மூல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு, 12 கோடி ரூபாய்.
குடோனில் இருந்த மைசூரை சேர்ந்த சித்திக் மொஹல்லாவின் முகமது இர்பான், ஹுன்சூரின் முகமது இர்பான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து மூல பொருட்களை வாங்கி வந்து, போதை பொருள் தயாரித்து, குடோனில் பதுக்கி வைத்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே எடுத்து சென்று விற்பனை செய்தது தெரிந்தது. வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.
