/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.21 கோடி போதை பறிமுதல்; பெங்களூரில் 15 பேர் கைது
/
ரூ.21 கோடி போதை பறிமுதல்; பெங்களூரில் 15 பேர் கைது
ரூ.21 கோடி போதை பறிமுதல்; பெங்களூரில் 15 பேர் கைது
ரூ.21 கோடி போதை பறிமுதல்; பெங்களூரில் 15 பேர் கைது
ADDED : பிப் 17, 2026 11:42 PM

பெங்களூரு: பெங்களூரில் கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற 21.50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வெளிநாட்டினர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு சி.சி.பி.,யின் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அம்ருதஹள்ளி, ஹெப்பகோடி, ஜே.பி.நகர், சேஷாத்திரிபுரம், கோவிந்தபுரா, மஹாலட்சுமி லே - அவுட் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர்.
இதில், பெங்களூரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட தென் ஆப்ரிக்காவின் கோர்லி டேனியல், 34, நைஜீரியாவின் இப்ராஹிம், 35, செனகல் நாட்டின் பாரி யாயா, இந்தியாவின் கேரளா உட்பட பல மாநிலங்களை சேர்ந்த 12 பேர் என மொத்தம், 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து, 9 கிலோ 460 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 5 கிலோ 677 கிராம் மெத்ஆம் பெட்டமைன், 131 கிராம் கோகைன், 462 மி.லி., கஞ்சா ஆயில் என 21.50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து, இவர்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்.

