sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தங்கவயல் செக் போஸ்ட்

/

 தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : பிப் 17, 2026 11:42 PM

Google News

ADDED : பிப் 17, 2026 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இவரது சாதனை என்ன?

கை காரங்க ஆட்சியில் வீடற்ற ஏழைகளுக்கு இலவசமா, இரண்டு லட்சம் பேருக்கு வீடுகள் வழங்கினதா சுவாமி சன்னதி விழாவுக்கு வந்த 'ஸ்டேட் மந்திரி' சொன்னாரு. இவரு 28 ஆண்டா தேசிய தலைநகர் செங்கோட்டை பதவிக்கு 'ரூட்டு' தந்த கோல்டு சிட்டி வீடற்றவங்களுக்கு இதுவரை எத்தனை பேருக்கு இலவச வீடுகள், வீட்டு மனைகள், பயிர் செய்ய நிலத்தை வழங்கினாரு. பட்டியல் இருந்தா சொல்லுவாரா. இது தான் தனது சாதனையென கம்பீரம் காட்டுவாரா.

கோல்டு சிட்டியின் 50 சதவீத வீடுகள், சுரங்க குடியிருப்பு பகுதியில் வீட்டுரிமை இல்லாமல் வாழ்றவங்களுக்கு வீடுகள் சொந்தம் ஆக்கி தந்தாரா. இதெல்லாம் இவரோட கவனத்திற்கு வரலையா. 1,000 நாட்கள் மாநில கை ஆட்சியில் வீடற்ற ஏழைகள் 2 லட்சம் பேருக்கு வீடுகள் வழங்கினதா பேசினவரு, 10,000 க்கும் அதிகமான நாட்கள் செங்கோட்டையில் கொட்டம் போட்டப்ப எத்தனை வீடுகளை வீடற்ற கோல்டு சிட்டிக்காரங்களுக்கு கிடைக்க வைத்தாருன்னு சொல்வாரா.

***

* சட்டம் பாயுமா?

ரவுடிகள் நடமாட்டத்தை அடக்க, பெரிய ஆபீசரு ரோந்து பணியில சுழலுறாரு. 10க்கும் மேற்பட்ட ரவுடிகளை மாவட்டத்தை விட்டே வெளியேற்றினாரு. ஆனால், ஊருக்குள்ளே வெள்ளாடை அணிந்த நில அபகரிப்பு மாபியாக்கள், சிட்டிக்குள் 'கேங் ஒர்க்' ஜாஸ்தி ஆகியுள்ளது. இவங்கள காக்கி சும்மா விட்டு வெச்சிருக்காங்களே. இவங்க பேர்ல சட்டம் அதன் கடமையை செய்யாதா என மனைகளை இழந்த பலரு கண்ணீர் விடுறாங்க.

மாபியா கும்பலுக்கு சில ஆபீசர்களே துணை போறாங்களாம். ஒரிஜினல் போல் பட்டா தயார் செய்து மிரட்டி, விரட்டுவதா சொல்றாங்க. நீதிமன்றத்தில் வழக்குகள் குவியுது. இதன் மீது காக்கிகள் கவனம் செலுத்துவாங்களா. எதுக்கு இவங்கள சும்மா விட்டு வெச்சிருக்காங்களோ?

மைனிங் நிலங்களுக்கும் முனிசி.,யில் கிராம பஞ்சாயத்துகளில் பட்டா பதிவு செய்து தருவதாக கூறப்பட்ட சம்பவங்கள் இருக்குது. இவங்க மீது சட்டம் எப்போ பாயுமோ.

***

* சும்மா துாங்குது தங்கம்!

கோல்டு விலை ஜெட் வேகத்தில் உச்சத்தில் போய்க்கொண்டிருக்கிறது. மலை போல குவிந்துள்ள சயனாட் மண்ணில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில 'தங்கம்' இருப்பதாக தொழில் நுட்பம் தெரிஞ்சவங்க, ம.அரசுக்கு பல முறை தெரிவிச்சாங்களே, அது வெறும் கண்துடைப்பு தானா.

திறந்த வெளியில் கொட்டி கிடக்கும் மண்ணுக்கு காவல் காக்க வைத்திருக்காங்களே தவிர, வேறொன்றுக்கும் பயன்படுத்தலயே.

சுரங்கத்தில் 30 கி.மீ., வரை 'தங்கம்' இருப்பதாக வரலாற்று ஆய்வு தெரிவிச்சாலும், வெட்டி எடுக்காம விட்டு வெச்சிருக்காங்களோ. சர்வதேச மல்டி கம்பெனி மில்லினியர்கள் எல்லாம் இந்த தங்கத்தை எடுப்பதாக கூறியும் ரேட் கட்டுப்படி ஆகலையா. வளம் இருந்தும் களம் காண துடிக்கலையே ஏன்.

***

* ஓயாத அலப்பறை!

முனிசி., பதவிக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகுது. ஆனாலும், பதவி இன்னும் இருப்பதாகவே அலப்பறை தொடருதே. முனிசி., ஆபீசர்களை முன்பு மிரட்டி காரியம் முடித்தவர்கள், தற்போது அசெம்பிளி அம்மாவின் ஆசி பெற்றவர்களாக கதை சொல்லி பணிய வைக்கிறாங்களாம். பட்டா விஷயத்தில் பல லட்சங்களை சுருட்டினவங்க, அடுத்த தேர்தலுக்காக பெட்டியில் பணம் பதுக்கி வெச்சிருக்காங்களாம். ருசி கண்ட பூனைகளாச்சே. ஜனங்க மனசில இவங்களோட பணம் பேசும் என்பது, இவங்க கணக்கு. இந்த மன கணக்கெல்லாம் என்ன முடிவை எழுதுமோ.

***






      Dinamalar
      Follow us