sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.42 கோடி போதை பறிமுதல்

/

 பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.42 கோடி போதை பறிமுதல்

 பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.42 கோடி போதை பறிமுதல்

 பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.42 கோடி போதை பறிமுதல்


ADDED : ஜன 23, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் 41.75 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, பிரேசில் நாட்டின் சா பாலோவில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது.

இந்த விமானத்தில், போதை பொருள் கடத்தி வரப்பட்டதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஒரு பயணி வைத்திருந்த சூட்கேசில், குழந்தைகள் படிக்கும் கதை புத்தகங்கள் நிறைய இருந்தன.

அந்த புத்தகங்களின் எடை அதிகமாக இருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள், புத்தகங்களின் அட்டைகளை பிரித்து பார்த்த போது, கோகைனை மறைத்து வைத்து அதற்கு மேல், அட்டையை ஒட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கோகைனை எடை பார்த்த போது 7.72 கிலோ இருந்தது. சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு 38.60 கோடி ரூபாய். கோகைன் கடத்திய பயணி கைது செய்யப்பட்டார்.

இதுபோல தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில், கடத்தி வரப்பட்ட 8.98 கிலோ ஹைட்ரோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 3.14 கோடி ரூபாய். இந்த கடத்தலிலும் ஒரு பயணி கைது செய்யப்பட்டார்.

இரு வழக்கிலும் 41.74 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன், ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us