/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தாம்பிராஸ்' ஜே.பி., கிளையில் வரும், 25ல் குத்துவிளக்கு பூஜை
/
'தாம்பிராஸ்' ஜே.பி., கிளையில் வரும், 25ல் குத்துவிளக்கு பூஜை
'தாம்பிராஸ்' ஜே.பி., கிளையில் வரும், 25ல் குத்துவிளக்கு பூஜை
'தாம்பிராஸ்' ஜே.பி., கிளையில் வரும், 25ல் குத்துவிளக்கு பூஜை
ADDED : ஜன 23, 2026 06:03 AM
பெங்களூரு: தாம்பிராஸ் ஜே.பி., நகர் கிளை சார்பில் வரும் 25ம் தேதி குத்து விளக்கு பூஜை நடக்கிறது.
'தாம்பிராஸ்' எனும் தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் உலக நன்மைக்காக குத்து விளக்கு பூஜை நடத்தப்படுகிறது. இந்தாண்டு தாம்பிராஸ் ஜே.பி., நகர் கிளை சார்பில் வரும் 25ம் தேதி காலை 9:30 மணிக்கு பெங்களூரு ஜே.பி., நகர் ஸ்ரீராம மண்டலியில் நடக்கிறது. இதில், தாம்பிராஸ் மாநில தலைவர் நாராயணன் பங்கேற்கிறார்.
பூஜையில் பங்கேற்க விரும்புவோர், பெரிய தாம்பாளம், அரிசி, பஞ்சபத்ர உத்ரிணி, தீபாராதனை தட்டு, 5 முக விளக்கு, சிறிய தட்டு, பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி, அகல் விளக்கு, அமர்வதற்கு பாய் ஆகியவை கொண்டு வர வேண்டும்.
தாம்பிராஸ் சார்பில் அர்ச்சனைக்கு குங்குமம், மலர், வெற்றிலை பாக்கு, கற்பூரம், சர்க்கரை பொங்கல், சுண்டல், அகர்பத்தி, விளக்கிற்கு எண்ணெய், திரி, பிரசாத தொன்னை, தேங்காய், வாழைப்பழம் வழங்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு தாம்பிராஸ் ஜே.பி., நகர் கிளை தலைவர் புவனேஸ்வரனின், 70920 96635/93412 25805/ 72599 13210 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

