/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.50 கோடி போதை பொருள் விமான நிலையத்தில் பறிமுதல்
/
ரூ.50 கோடி போதை பொருள் விமான நிலையத்தில் பறிமுதல்
ADDED : அக் 13, 2025 03:43 AM

பெங்களூரு : கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, போதை காளான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
இலங்கையில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு, விமானம் மூலம் உயர்ரக கஞ்சா, மேஜிக் காளான் எனும் போதை காளான் ஆகியவை கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்படி, தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வந்தது கடந்த 9ம் தேதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை பயணியர் விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர்.
இதில், இலங்கையிலிருந்து வரும் சரக்கு விமானத்தில் கஞ்சா, போதை காளான் ஆகியவை எடுத்து வருவதாக தெரிவித்தனர். இதன்பேரில், அந்த விமானத்தில் சோதனை நடத்தியதில் உணவு பொருட்கள் டின்களி ல் கஞ்சா, காளான்கள் அடைக்கப்பட்டு கொண்டு வந்தது தெரிந்தது.
மொத்தம் 45 கிலோ உயர்ரக கஞ்சா, 6 கிலோ மேஜிக் காளான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 50 கோடி ரூபாய். இதையடுத்து, அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது .
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.