/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விஜயபுராவில் நிலநடுக்கம் மக்கள் அலறியடித்து ஓட்டம்
/
விஜயபுராவில் நிலநடுக்கம் மக்கள் அலறியடித்து ஓட்டம்
விஜயபுராவில் நிலநடுக்கம் மக்கள் அலறியடித்து ஓட்டம்
விஜயபுராவில் நிலநடுக்கம் மக்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : அக் 30, 2025 04:39 AM
விஜயபுரா:  விஜயபுரா மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
விஜயபுரா மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் கிலியடைந்து வெளியே ஓடி வந்தனர். பூமிக்குள் இருந்து விசித்ரமான சத்தம் கேட்டது. வீடுகளில் இருந்து பொருட்கள் சிதறி விழுந்தன. மக்கள் வீட்டுக்குள் செல்லாமல், வெளியே திறந்த வெளியில் இரவு முழுதும் இருந்தனர்.
நேற்று அதிகாலை 5:30 மணியளவில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. விஜயபுராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை, இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையமும் உறுதி செய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 3.3 புள்ளி என அதிர்வு பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட கிராமங்களுக்கு, சுரங்கம், நில ஆய்வியல் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களில் 12 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லேசான நில நடுக்கம் என்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. ஆனால் அவ்வப்போது இது போன்று நடப்பதால், மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்.

