/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோழிக்கறி சாப்பிடுங்க; ஒண்ணும் ஆகாது அசோக்கிற்கு சித்தராமையா அறிவுரை

ADDED : டிச 09, 2025 06:38 AM

பெலகாவி: 'கோழிக்கறி சாப்பிடுங்க; ஒண்ணும் ஆகாது,'' என்று எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு, முதல்வர் சித்தராமையா அறிவுரை கூறினார்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் தலைவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில், முதல்வர் சித்தராமையாவும், எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும் நேற்று சந்தித்து கொண்டனர். துணை முதல்வர் சிவகுமார் வீட்டில் அசைவ விருந்து சாப்பிட்டது பற்றி முதல்வரிடம், அசோக் கிண்டலாக பேசினார்.
பின், ''உங்களை மாதிரி நான் கோழிக்கறி சாப்பிட மாட்டேன் சார்; அதை எல்லாம் சாப்பிடுவதை விட்டு விட்டேன்,'' என்று அசோக் கூறினார்.
அப்போது சித்தராமையா, ''ஏய் அசோகா கோழிக்கறி சாப்பிடுங்க; ஒண்ணும் ஆகாது; வாங்க இரண்டு பேரும் சாப்பிடலாம்,'' என்று கூறினார்.
பின், அசோக் அருகில் நின்ற எம்.எல்.ஏ., சுனில்குமாரிடம், ''எதற்காக எங்கள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போகிறீர்கள்,'' என்று முதல்வர் கேட்டார். இதற்கு அசோக்கும், சுனில்குமாரும் சிரிப்பையே பதிலாக கொடுத்தனர்.