/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐஸ்வர்யா கவுடா சொத்துக்கள் பறிமுதல் செய்ய ஈ.டி., முடிவு
/
ஐஸ்வர்யா கவுடா சொத்துக்கள் பறிமுதல் செய்ய ஈ.டி., முடிவு
ஐஸ்வர்யா கவுடா சொத்துக்கள் பறிமுதல் செய்ய ஈ.டி., முடிவு
ஐஸ்வர்யா கவுடா சொத்துக்கள் பறிமுதல் செய்ய ஈ.டி., முடிவு
ADDED : ஜூன் 19, 2025 11:18 PM

பெங்களூரு: மோசடி வழக்குகளில் கைதாகி, ஜாமினில் உள்ள ஐஸ்வர்யா கவுடாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாண்டியாவின் மலவள்ளி கிருகாவலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 33. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கிறார்.
துணை முதல்வர் சிவகுமாரின் தம்பியும், பெங்களூரு ரூரல் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக் கடைகளில் நகை வாங்கி மோசடி செய்தார்.
இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, கடந்த ஏப்ரல் மாதம் ஐஸ்வர்யா கவுடாவை கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி சுரேஷுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, ஐஸ்வர்யா கவுடா தொடர்பான மோசடி வழக்குகளை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், ஐஸ்வர்யா பெயரில் பெங்களூரு, மாண்டியாவில் சொத்துக்கள் இருப்பதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாகவும், விரைவில் நடைமுறைகளை துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஐஸ்வர்யாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.