/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐஸ்வர்யா வீடுகளில் ஈ.டி., 'ரெய்டு' அறிமுகமான அரசியல் புள்ளிகள் பீதி
/
ஐஸ்வர்யா வீடுகளில் ஈ.டி., 'ரெய்டு' அறிமுகமான அரசியல் புள்ளிகள் பீதி
ஐஸ்வர்யா வீடுகளில் ஈ.டி., 'ரெய்டு' அறிமுகமான அரசியல் புள்ளிகள் பீதி
ஐஸ்வர்யா வீடுகளில் ஈ.டி., 'ரெய்டு' அறிமுகமான அரசியல் புள்ளிகள் பீதி
ADDED : ஏப் 25, 2025 05:38 AM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த, ஐஸ்வர்யா கவுடா வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மாண்டியா, மலவள்ளி கிருகாவலு கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 33. இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நந்தினி லே - அவுட்டில் வனிதா என்பவர் நடத்தி வரும் நகைக்கடையில் இருந்து 8.50 கோடி ரூபாய் மதிப்பிலான, நகைகளை வாங்கினார். பணம் கொடுக்காமல் மோசடி செய்தார். வனிதா அளித்த புகாரில் ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டார். பின், ஜாமினில் வந்தார்.
இதையடுத்து, மேலும் மூன்று நகைக்கடை உரிமையாளர்கள், தங்களிடமும் நகை வாங்கி ஐஸ்வர்யா பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்தனர். மூன்று வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தார். மற்ற இரண்டு வழக்குகளில் அவரை கைது செய்ய, நீதிமன்றம் தடை விதித் திருந்தது.
ஐஸ்வர்யாவின் வங்கிக் கணக்கை போலீசார் ஆய்வு செய்த போது, மூன்று மாதங்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தது தெரிந்தது. இதுபற்றி ஈ.டி., எனும் அமலாக்கத்துறைக்கும் தகவல் கிடைத்து இருந்தது.
இந்நிலையில் பெங்களூரு மற்றும் கிருகாவலுவில் உள்ள ஐஸ்வர்யா கவுடாவின் வீடுகளில், நேற்று ஈ.டி., அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். பெங்களூரு வீட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, போலீஸ் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது சில ஆவணங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாவுக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளது. இவரது காரை, தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி பயன்படுத்தி வந்தார். விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்.
வினய் குல்கர்னி
இந்நிலையில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள, வினய் குல்கர்னி வீட்டிற்கு நேற்று மாலை 4:00 மணிக்கு, ஐந்து கார்களில் ஆறு ஈ.டி., அதிகாரிகள் சென்று, சோதனை நடத்தினர். அவரது வீட்டில் சில ஆவணங்களை எடுத்து சரிபார்த்தனர். அப்போது வினய் குல்கர்னி அங்கு இருந்தாரா, இல்லையா என்பது பற்றி தகவல் இல்லை. நேற்று இரவு வரை சோதனை நடந்தது.
ஈ.டி., அதிகாரிகள் சோதனையின் போது, அரசியல்வாதிகளுடன் உள்ள தொடர்பு பற்றி ஏதாவது ஆவணம் சிக்கினால், அதை வைத்து அரசியல்வாதிகளிடம் விசாரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஐஸ்வர்யாவுக்கு தெரிந்த, அரசியல் பிரமுகர்களுக்கு பீதி ஏற்பட்டு உள்ளது.