காங்கோ நாட்டின் தங்க சுரங்க பங்குதாரர் அமைச்சர் சதீஷ் குறித்து ஈ.டி., அதிர்ச்சி
காங்கோ நாட்டின் தங்க சுரங்க பங்குதாரர் அமைச்சர் சதீஷ் குறித்து ஈ.டி., அதிர்ச்சி
ADDED : செப் 12, 2026 04:36 AM

பெங்களூரு: காங்கோ நாட்டின் தங்க சுரங்க நிறுவனத்தி ன் பங்குதாரராக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உள்ளார் என்ற, அதிர்ச்சி தகவலை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, 64. இவர் சட்டவிரோதமாக உகாண்டா, ருகாண்டா நாடுகளில் பண முதலீடு செய்த விவகாரத்தில் 'பெமா' சட்டத்தில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 37 மணி நேரம் சதீஷின் அரசு பங்களாவில் சோதனை நடத்தப்பட்டது.
அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, அவரது நெருங்கிய கூட்டாளிகள் தொடர்பான 21 இடங்களில், செப்டம்பர் 9, 10ம் தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சதீஷ் குடும்பத்தினர் வெளிநாட்டு முதலீடுகள், எல்லை தாண்டிய வணிக உறவுகள் குறித்து தகவல் சேகரிக்க சோதனை நடத்தப்பட்டது.
காங்கோ நாட்டின் தங்க சுரங்க நிறுவனம் மேக்னிட்யுட் ஸ்டாரல் சதீஷ் ஜார்கிஹோளி பங்குதாரராக உள்ளார்.
அவருக்கு அங்கு 40 சதவீத பங்கு உள்ளது. பொதுப்பணித்துறையில் நடக்கும் பணிகளை, கோல்கட்டா நிறுவனத்திற்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது.அதில் கிடைத்த பணத்தையும், வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளனர்.
கான்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்சம் வசூலித்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பிற முக்கிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோதனையின் போது 3.30 கோடி ரூபாய் ரொக்கம், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
