/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவு
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவு
ADDED : ஜூலை 11, 2025 04:39 AM
பெங்களூரு: அடுத்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு நெருக்கடியை குறைக்கும் நோக்கிலும், கர்நாடக கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு, கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், நடப்பாண்டு டிசம்பர் இறுதிக்குள், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வசதியாக இருக்கும். பாடங்களை நடத்தி முடித்த பின், ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், அதை தங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளும்படி, மாணவர்களுக்கு தைரியமூட்ட வேண்டும். மாணவர்களின் கல்வியில் சிறப்பு அக்கறை காட்ட வேண்டும்.
ஜூலையில் இருந்தே, சிறப்பு வகுப்புகளை துவக்க வேண்டும். மாணவர்களின் கையெழுத்து திறனை அதிகரிக்க, மாதிரி வினாத்தாள்கள் எழுதும் பொறுப்பை, அவர்களிடம் அளிக்க வேண்டும். பள்ளியில் பிரார்த்தனை நேரத்தில், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும்.
நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்தி, அவர்களுக்கு குழப்பங்கள் இருந்தால், நிவர்த்தி செய்ய வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, பெற்றோருடன் ஆலோசனை நடத்தி, பிள்ளைகளை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களை பள்ளிக்கு வரும்படி செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளியை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க, விளையாட நேரம் ஒதுக்குவது அவசியம். அவர்கள் மொபைல் போன், சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.