/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்வி யாருடைய சொத்தும் அல்ல! முதல்வர் சித்தராமையா தத்துவம்
/
கல்வி யாருடைய சொத்தும் அல்ல! முதல்வர் சித்தராமையா தத்துவம்
கல்வி யாருடைய சொத்தும் அல்ல! முதல்வர் சித்தராமையா தத்துவம்
கல்வி யாருடைய சொத்தும் அல்ல! முதல்வர் சித்தராமையா தத்துவம்
ADDED : அக் 18, 2025 11:10 PM

மைசூரு: ''கல்வி என்பது யாருடைய சொத்தும் அல்ல. சம வாய்ப்புகள் வழங்குவதன் மூலம், அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரு மானசகங்கோத்ரியில் உள்ள அம்பேத்கர் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் நேற்று விஸ்வஞானி அரங்கத்தை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இல்லாததால், சமத்துவமின்மை உருவாக்கப்பட்டது. இன்று சமூகத்தில் முரண்பாடுகள் சற்று குறைவாக உள்ளன. 10 தொகுதிகள் கொண்ட இந்திய அரசியலமைப்பை கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளேன். அனைவரும் அதை படிக்க வேண்டும்.
உலகின் அனைத்து நாடுகளின் அரசியலமைப்பை படித்து, நம் நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பை அம்பேத்கர் உருவாக்கினார். இந்த அரசியலமைப்பை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு.
நான், பாபாசாகேப் பொருளாதார பள்ளியை நிறுவி உள்ளேன். ஜாதி அமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும்; சமத்துவம் வராது. எனவே, ஜாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்.
ஜாதி அமைப்பு ஆழமாக வேரூன்றி உள்ளது. பசவண்ணர் 850 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி அமைப்பை ஒழிக்க சொன்னார்; இன்னும் சாத்தியமாகவில்லை.
தலைமை நீதிபதி மீது காலணிகளை வீசும் ஜாதி அமைப்பு இன்னும் உள்ளது. இது அவமானகரமானது. அம்பேத்கர் வாதங்கள், பசவண்ணரின் கொள்கைகள், புத்தரின் கருத்துகளில் நான் நமபிக்கை கொண்டு உள்ளேன். நாம் சுயமரியாதை கொண்டவர்களாக மாற வேண்டும். அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும்.
கல்வி என்பது யாருடைய சொத்தும் அல்ல. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே, சமமான சமூகத்தை உருவாக்க முடியும். சம வாய்ப்புகள் வழங்குவதன் மூலம், அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

