/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' எம்.பி., மீதான வழக்கு ரத்து அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி
/
'மாஜி' எம்.பி., மீதான வழக்கு ரத்து அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி
'மாஜி' எம்.பி., மீதான வழக்கு ரத்து அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி
'மாஜி' எம்.பி., மீதான வழக்கு ரத்து அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி
ADDED : அக் 18, 2025 11:10 PM

பெங்களூரு: சட்டசபை தேர்தலின்போது அனுமதியின்றி பைக் ஊர்வலத்தில் பங்கேற்றதாக பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா மீது, அதிகாரிகள் தவறான பிரிவில் வழக்குப் பதிவு செய்ததால், அதிருப்தி தெரிவித்த, உயர்நீதிமன்றம், அவர் மீதான வழக்கை ரத்து செய்தது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலின்போது, டி.நரசிபுராவில் உள்ள ரங்கசமுத்திரம் அருகே பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, தன் கட்சியினருடன் பைக் ஊர்வலத்தில் பங்கேற்றார்.
இந்த ஊர்வலத்திற்கு அனுமதி பெறவில்லை என கூறி, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரதாப் சிம்ஹா மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு நீதிபதி சுனில் தத் யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கூடுதல் அரசு வக்கீல் ஜெகதீஷ் வாதிடுகையில், ''அதிகாரிகள், மனுதாரர் மீது பிரிவு 188ன் கீழ் பதிவு செய்வதற்கு பதிலாக, 171 எச் பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
''ஆனாலும், அவர் தேர்தல் விதிகளை மீறியுள்ளார் என்பது தெரிகிறது. விசாரணை அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட, வலுவான கருத்தை நீதிமன்றம் வெளியிட வேண்டும்,'' என்றார்.
நீதிபதி சுனில் தத் யாதவ் கூறியதாவது:
விசாரணை அதிகாரிகள், எதிர்காலத்தில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் செயல்படுகின்றனர். எனவே, எந்த தகுதியும் இல்லாவிட்டாலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்று தெரிந்தும், வழக்குப் பதிவு செய்துள்ளது, அவர்களின் அணுகுமுறை மூலம் தெரிகிறது. இந்த மனநிலையை ஏற்க முடியாது.
ஐ.பி.சி., பிரிவுகளுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல், அதிகாரிகள் சில நேரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தி, செயல்முறையை தவறாக வழிநடத்துகிறது.
சில வழக்குகளில், அதிகாரிகள் வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இதனால் தொழில்நுட்ப ரீதியாக, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இத்தகைய நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். எனவே, மனுதாரர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

