/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பாஸ் மார்க்' குறைப்புக்கு கல்வி அமைப்பு எதிர்ப்பு
/
'பாஸ் மார்க்' குறைப்புக்கு கல்வி அமைப்பு எதிர்ப்பு
'பாஸ் மார்க்' குறைப்புக்கு கல்வி அமைப்பு எதிர்ப்பு
'பாஸ் மார்க்' குறைப்புக்கு கல்வி அமைப்பு எதிர்ப்பு
ADDED : ஆக 11, 2025 04:41 AM
பெங்களூரு: கர்நாடகாவில் 10ம் வகுப்பு, பி.யு., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 'பாஸ் மார்க்' குறைக்கப்பட்டதற்கு கல்வி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
கர்நாடகாவில் 10, பி.யு., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரிய சட்டம் 1966ன் படி அறிவிக்கப்பட்டது.
இதற்கு பி.ஏ.எப்.ஆர்.இ., எனும் அடிப்படை கல்வி உரிமைக்கான மக்கள் கூட்டணி கல்வி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த புதிய திருத்தத்தின் மூலம் கல்வியின் தரம் சீர்குலையும். இதனால், மாணவர்களின் படிப்பறிவு குறையும். கன்னடவழி பள்ளிகள் அதிகம் பாதிக்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மதிப்பெண்களை குறைக்கும் பணிகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
பல தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், அவர்களே, அனைத்து பாடங்களையும் கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் பொது சேவைகள் செய்ய நியமிக்கப்படுகின்றனர்.
இ தனாலும், மாணவர்களிடம் பாடம் கற்பிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இது தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணமாக உள்ளது. இது போன்ற விஷயங்களில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பதிலாக, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து, மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க கூடாது.
இவ்வாறு அதில் கூ றப்பட்டு உள்ளது.