தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாய் மயி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

 சாய் மயி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

 சாய் மயி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணம்


ADDED : ஜூலை 03, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: சாய் மயி அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பெங்களூரின் ஹிருதய ஸ்பந்தனாவின் கீழ் செயல்படும் சாய் மயி அறக்கட்டளை சார்பில், சித்ரதுர்காவின் ஹிரியூர் தாலுகாவில் உள்ள, 214 அரசு துவக்க, உயர் நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும், 10,499 மாணவர்களுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சாய் மயி அறக்கட்டளையின் செல்வி சாய்ரா ஹரிசங்கர் பேசுகையில், ''பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் ஈர்க்கப்பட்ட நாங்கள், கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு உள்ளோம். இந்த கண்ணோட்டத்தில் 'சிக் ஷ சேது' என்ற திட்டத்தை உருவாக்கி, மாணவர்களுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்குகிறோம்,'' என்றார்.

சாய் மயி அறக்கட்டளை அறங்காவலர்கள் சீனிவாஸ், பிரசாத், சைலேஷ் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us