தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முட்டை விலை 'கிடுகிடு' உயர்வு

 முட்டை விலை 'கிடுகிடு' உயர்வு

 முட்டை விலை 'கிடுகிடு' உயர்வு


ADDED : ஆக 27, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: முட்டை விலை, தொடர்ந்து ஏறுமுகமாக உயர்கிறது. வரும் நாட்களில், ஒரு முட்டை விலை 20 ரூபாய் முதல், 25 ரூபாயை எட்டும் வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் முட்டை விலை, கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், 35 சதவீதம் முதல், 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மொத்த விலையில் 7 ரூபாயாகவும், சில்லரை விலையில் 8.50 ரூபாய் முதல், 9.00 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குளிர் காலம் நெருங்குவதால், முட்டை பயன்பாடு அதிகரிக்கும். எனவே, விலை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கோழிகள் தீவனம் தயாரிப்பில், மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கோழி தீவனத்தில் பண்ணை உரிமையாளர்கள் செய்யும் செலவில், 70 சதவீதம் மக்காச்சோளத்துக்கு செலவாகிறது.

எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு, மக்காச்சோளம் தேவை அதிகரிக்கிறது. மார்க்கெட்டில் மக்காச்சோளத்துக்கு டிமாண்ட் உள்ளதால், விலை அதிகரிக்கிறது.

இதற்கு முன், மக்காச்சோளம் விலை, டன்னுக்கு, 14,000 ரூபாயாக இருந்தது. இப்போது இதன் விலை, 26 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் கோழி தீவனமான சோயாபீன்ஸ் விலையும் அதிகரித்துள்ளது. இது கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. முட்டை விலையை அதிகரிக்கின்றனர்.

குளிர் காலத்தில் முட்டை தேவை, மேலும் அதிகரிக்கும். அப்போதும் மக்காச்சோளம் விலை இதே போன்று அதிகரித்தால், ஒரு முட்டையின் விலை, 20 முதல், 25 ரூபாயாகலாம் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us