தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகாவில் ஆண்டு இறுதிக்குள் எட்டு லட்சம் பி.என்.ஜி., இணைப்புகள்

 கர்நாடகாவில் ஆண்டு இறுதிக்குள் எட்டு லட்சம் பி.என்.ஜி., இணைப்புகள்

 கர்நாடகாவில் ஆண்டு இறுதிக்குள் எட்டு லட்சம் பி.என்.ஜி., இணைப்புகள்


ADDED : ஏப் 17, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

கே.கே.பி.எம்.பி.எல்., என்ற, கொச்சி - கூட்டநாடு - பெங்களூரு - மங்களூரு குழாய் திட்டத்தை, வரும் செப்டம்பருக்குள் முடிக்க, கெயில் காஸ் லிமிடெட் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கர்நாடகாவில் எட்டு லட்சம் பேருக்கு பி.என்.ஜி., என்ற, குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள, 31 மாவட்டங்களிலும், 100 சதவீதம் குழாய் வழி எரிவாயு வினியோகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏறக்குறைய, 25,000 கோடி ரூபாய் அளவில் மாநிலம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், நிலத்துக்கு அடியில் குழாய் பதிப்பதற்கு மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியாக பணிகள் முடிந்ததும், வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் இணைப்புகள் வழங்கப்பட்டு, குழாய் வழியே இயற்கை எரிவாயு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

*5வது இடம்

ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்தியாவில் பி.என்.ஜி., இணைப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு நகருக்குள் மட்டும் 3,500 கி.மீ., துாரத்திற்கு மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக, கடந்த சில மாதங்களாக எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, எல்.பி.ஜி., சிலிண்டர்களில் இருந்து குழாய் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு மாறும் மக்களின் எண்ணிக்கை, கர்நாடகாவில் கணிசமாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்திற்கு பிறகு மட்டும் கர்நாடகா முழுவதும் 25,000 முதல் 30,000 புதிய இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

மாநில அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த, 'நகர எரிவாயு வினியோகக் கொள்கை' மூலம், குழாய் பதிக்க வசூலிக்கப்படும் கட்டணம் மீட்டருக்கு 1,957 ரூபாயிலிருந்து 1 ரூபாயாக குறைக்கப்பட்டது. இது, இணைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

*எட்டு லட்சம்

வரும் டிசம்பருக்குள் தமிழகம் எல்லை வழியாக வரும் கே.கே.பி.எம்.பி.எல்., திட்டம் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இந்த எண்ணிக்கை எட்டு லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எரிவாயு குழாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற சிலிண்டர் எரிவாயு வாடிக்கையாளர்கள் இனி கட்டாயம் பி.என்.ஜி., இணைப்பிற்கு மாற வேண்டும் என்று, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பி.என்.ஜி., வசதி வந்த பிறகும் இணைப்பு பெறாத வீடுகளுக்கு, மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்படும் என, அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எல்.பி.ஜி., சிலிண்டர் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், எரிபொருள் வினியோகத்தை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் வருமாறு:

1. கொச்சி - கூட்டநாடு - பெங்களூரு - மங்களூரு குழாய் திட்டம்

கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் மிக முக்கியமான திட்டம் இது. இது இரண்டு பிரிவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,104 கி.மீ., துாரத்துக்கு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கொச்சியில் துவங்கி, மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.

இந்தத் திட்டம், 2009 ஜூன் 22ல் அறிவிக்கப்பட்டது. 2012ல் ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட போது, 2,915 கோடி முதல் 3,032 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. திட்டப்பணிகள் தாமதமானதால், தற்போது 5,750 கோடி - 5,909 கோடி ரூபாயாக திட்டமதிப்பீடு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் நிலவரப்படி, 919 கி.மீ., நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 657 கி.மீ., பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

2013 மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, வரும் செப்டம்பருக்குள் முழுமையாக முடிக்க கெய்ல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

அ. மங்களூரு நோக்கிய பாதை (பகுதி - I): கேரளா: கொச்சி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, கர்நாடகாவில் தட்சிண கன்னடா (மங்களூரு).

ஆ. பெங்களூரு நோக்கிய பாதை (பகுதி - II):

கேரளா: பாலக்காடு, தமிழகம்: கோயம்புத்துார், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகாவில் பெங்களூரு நகர்ப்புறம், கிராமப்புறம்.

2. தபோல் - பெங்களூரு (Trunk Line) திட்டம்

தேசிய எரிவாயு கட்டமைப்புடன் தென்னிந்தியாவை இணைப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் இது. 2013 டிசம்பரி-லேயே முடிக்கப்பட்டுவிட்டது. அப்போதைய திட்ட மதிப்பீடு 4,500 கோடி ரூபாய். இந்தத் திட்டமே தென்னிந்தியாவில் செயல்படுத்தப்படும் பிற எரிவாயு திட்டங்களுக்கு முன்னோடி.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தபோலில் இருந்து பெங்களூரு வரை 1,386 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. இது பெலகாவி, தார்வாட், பெல்லாரி, துமகுரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல மாவட்டங்களை இணைக்கிறது.

3. புதிய விரிவாக்கத் திட்டம் (ஏப்ரல் 2026 அறிவிப்பு)

ஏப்ரல் 13 அன்று அறிவிக்கப்பட்டது. கே.கே.பி.எம்.பி.எல்., பாதையை, தமிழகத்தின் முக்கியத் தொழில் மையங்களுடன் இணைப்பதே இதன் நோக்கம். திட்ட மதிப்பீடு 652.36 கோடி ரூபாய். இது 65.3 கி.மீ., துாரத்திற்கு கர்நாடகாவையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்படும்.

பாக்ஸ் - 1

பி.என்.ஜி., இணைப்பு வழங்கும் நிறுவனங்கள்

கர்நாடகாவில் பி.என்.ஜி., எனும் குழாய் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) அனுமதித்துள்ள முக்கிய நிறுவனங்களின் பட்டியல் வருமாறு:

நிறுவனம் மாவட்டங்கள்

1. கெயில் காஸ் லிமிடெட் (GAIL Gas Limited) பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு ஊரகம், தட்சிண கன்னடா (மங்களூரு)

இது கர்நாடகாவின் பி.என்.ஜி., திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பொதுத்துறை நிறுவனம்.

2. ஏ.ஜி.பி., பிரதம் (AG&P Pratham) மைசூரு, மாண்டியா, சாம்ராஜநகர், கோலார், ஹாசன், சிக்கமகளூரு, குடகு, பாகல்கோட், கொப்பால், ராய்ச்சூர், கலபுரகி, விஜயபுரா, ஷிவமொக்கா, உத்தர கன்னடா, ஹாவேரி

கர்நாடகாவில் பரப்பளவு ரீதியாக அதிக மாவட்டங்களில் உரிமம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் இது.

3. மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL) துமகுரு, பெலகாவி

4. இந்தியன் ஆயில் - அதானி காஸ் பிரைவேட் லிமிடெட் (IOAGPL) தார்வாட் (ஹூப்ளி - தார்வாட்), கதக்

இந்தியன் ஆயில் மற்றும் அதானி குழுமத்தின் கூட்டு நிறுவனம்.

5. அதானி டோட்டல் காஸ் லிமிடெட் (Adani Total Gas Ltd) உடுப்பி

6. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) பல்லாரி, பீதர்

7. மகாராஷ்டிரா நேச்சுரல் காஸ் லிமிடெட் (MNGL) ராமநகர்

8. யூனிசன் என்விரோ பிரைவேட் லிமிடெட் (Unison Enviro) சித்ரதுர்கா, தாவணகெரே

இணைப்பு வழங்கும்

நிறுவனங்கள்

கர்நாடகாவில் பி.என்.ஜி., எனும் குழாய் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) அனுமதித்துள்ள முக்கிய நிறுவனங்களின் பட்டியல் வருமாறு:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us