தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல் நைஜீரியர் உட்பட எட்டு பேர் கைது

 ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல் நைஜீரியர் உட்பட எட்டு பேர் கைது

 ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல் நைஜீரியர் உட்பட எட்டு பேர் கைது


ADDED : ஏப் 08, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 27.42 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நைஜீரியர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு ஹெப்பகோடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் சோதனை நடத்திய போது, 12 கிலோ 55 கிராம் எடையுள்ள மெத்தாம் பெட்டமைன், 275 கிராம் கோகைன், 40 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டில் வசித்த மேற்கு ஆப்ரிக்காவின் நைஜீரியா நாட்டை சேர்ந்த இம்மானுவேல், 41 கைது செய்யப்பட்டார்.

இதேபோல கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவின் முகமது நிஷாத், ஆதேஷ் ஆகியோரை, எலஹங்கா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 21 கிலோ 125 கிராம் எடையுள்ள 10.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மைக்கோ லே - அவுட் போலீசார் கஞ்சா விற்பனை செய்த, அசாம் மாநிலத்தின் போபியை கைது செய்து, அவரிடம் இருந்த 6 கிலோ எடையுள்ள 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பரப்பன அக்ரஹாரா, பாகலுார், பானஸ்வாடி போலீசார், கஞ்சா விற்ற 4 பேரை கைது செய்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஒட்டுமொத்தமாக ஆறு வழக்குகளில் எட்டு பேரை கைது செய்த போலீசார், போதை பொருட்கள், நகை, பணம், வாகனங்கள் என 27.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us