தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கள்ளக்காதலியை கொலை செய்து நாடகமாடிய முதியவர் கைது

 கள்ளக்காதலியை கொலை செய்து நாடகமாடிய முதியவர் கைது

 கள்ளக்காதலியை கொலை செய்து நாடகமாடிய முதியவர் கைது


ADDED : ஜன 18, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகல்கோட்: கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு, அப்பாவி போல அழுது நாடகமாடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

பாகல்கோட் மாவட்டம் ஜமகன்டி தாலுகாவில் உள்ள ஹிரேபடசலகி கிராமத்தில் வசித்த பெண் யமனவ்வா, 40. இவருக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவருடன் மனஸ்தாபம் ஏற்பட்டதால், விவாகரத்து பெற்ற யமனவ்வா, பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

பின், அதே கிராமத்தில் வசிக்கும், ஸ்ரீசைல பாட்டீல், 67, என்பவருடன் யமனவ்வாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பின், யமனவ்வாவுக்கு அதே கிராமத்தில் வசிக்கும், 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது, ஸ்ரீசைல பாட்டீலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது; யமனவ்வாவை கண்டித்தார். இந்த காரணத்தால் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்தது.

கடந்த, 13ம் தேதியன்று இரவும், வழக்கம் போல கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபமடைந்த ஸ்ரீசைல பாட்டீல், யமனவ்வாவின் காது பகுதியில் ஓங்கி அறைந்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பினார்.

மறுநாள் காலை இவரே, யமனவ்வாவின் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தார். அதன்பின் வெளியே வந்து, யமனவ்வா மாரடைப்பால் இறந்து கிடப்பதாக கிராமத்தினரிடம் கூறி அழுது நாடகமாடினார்.

பின், போலீசாருக்கும் தகவல் கூறினர். அங்கு வந்த ஜமகன்டி போலீசார், யமனவ்வாவின் உடலை பார்வையிட்டனர். அவரது உடலில் காய அடையாளம் இருப்பது தெரிந்தது. சந்தேகமடைந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அறிக்கையில் அவர் கொலையானது தெரியவந்தது. அதன்பின் போலீசார் விசாரணையை துவக்கினர்.

யமனவ்வாவுக்கு, ஸ்ரீசைல பாட்டீலுடன் கள்ளத்தொடர்பு இருந்த விஷயம் போலீசாருக்கு தெரிந்தது.

சந்தேகத்தில், ஸ்ரீசைல பாட்டீலை விசாரித்த போது, கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us