/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுத்தை கடித்ததில் விவசாயி காயம் பாக்கு மரத்தில் ஏறி உயிர் தப்பினார்

ADDED : ஜன 18, 2026 05:34 AM

தட்சிணகன்னடா: ஜன. 18-: வீட்டருகே சிறுத்தை தாக்கியதில், விவசாயி ஒருவர் காயமடைந்தார்.
தட்சிணகன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவில் உள்ள அன்டீரு கிராமத்தில் வசிப்பவர் மஞ்சப்பா நாயக், 62. இவரது வீட்டை ஒட்டி தோட்டம் உள்ளது. நேற்று காலை, 8:30 மணியளவில், தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த சிறுத்தை, அவர் மீது பாய்ந்து தாக்க முற்பட்டது. பயந்து போன நாயக், தோட்டத்தில் இருந்த பாக்கு மரத்தில் ஏறிக்கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்ததால், மஞ்சப்பா நாயக்கின் காலை மட்டும் கடித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது சிறுத்தை. காலில் பலத்த காயமடைந்த நாயக்கை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து, வனத்துறைக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் தோட்டம் அருகே கூண்டு வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். சிறுத்தையை பிடிக்கும் வரை, தனியாக நடமாட வேண்டாம்.
கதவை திறந்து வைக்க வேண்டாம். சிறு குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப வேண்டாம். அதிகாலை மற்றும் இரவில் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படி, வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.