தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துப்பாக்கியால் சுட்டு முதியவர் தற்கொலை

 துப்பாக்கியால் சுட்டு முதியவர் தற்கொலை

 துப்பாக்கியால் சுட்டு முதியவர் தற்கொலை


ADDED : ஜூன் 02, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: ஹொசநகராவை சேர்ந்த 85 வயது முதியவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின் நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரராவ், 85. நேற்று அதிகாலையில், இவரின் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதை கேட்டு விழித்த வீட்டில் இருந்தவர்கள், இவரின் அறைக்கு சென்று பார்த்த போது, உரிமம் பெற்ற தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த ஷிவமொக்கா நகர போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துப்பாக்கி சூட்டின் விளைவால், அவரின் தலை முற்றிலும் சிதைந்து காணப்பட்டது. அறையின் சுவர் முழுதும் ரத்த கறைகள் காணப்பட்டன.

மூன்று நாட்களுக்கு முன் ராமசந்திர ராவ் கீழே விழுந்ததில், அவரின் தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆனாலும், அடிபட்ட பகுதியில் வலி அதிகமாக இருந்தது. வலியை பொறுத்து கொள்ள முடியாமல், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us