ADDED : மே 13, 2026 03:22 AM

ஹலசூரு: வீட்டின் ஹாலில் 'சார்ஜ்' போட்டு இருந்த, எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் பலத்த தீக்காயம் அடைந்த, முதியவர் உயிரிழந்தார்.
பெங்களூரு ஹலசூரு மெர்சி டவுனில் வசித்தவர் லுார்துநாதன், 62, ஆட்டோ டிரைவர். இரண்டு மாடி கட்டட வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு லுார்துநாதன் மட்டும் ஹாலில் படுத்து துாங்கினார். அவர் துாங்குவதற்கு முன் எலக்ட்ரிக் பைக்கில் இருந்து பேட்டரியை தனியாக கழற்றி வந்து, ஹாலில் சார்ஜ் போட்டார்.
நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஹால் முழுதும் தீப்பிடித்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திடுக்கிட்டு வந்தனர்.
வீட்டில் பிடித்த தீயை அணைத்து, லுார்துநாதன் குடும்பத்தினரை மீட்டனர். ஆனால் பலத்த தீக்காயம் அடைந்த லுார்துநாதன் இறந்தார். ஹாலில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலாகின. ஹலசூரு போலீசார் விசாரிக்கின்றனர்.
