தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் யானை தாக்கி முதியவர் பலி நடை பயிற்சிக்கு சென்றபோது பரிதாபம்

 பெங்களூரில் யானை தாக்கி முதியவர் பலி நடை பயிற்சிக்கு சென்றபோது பரிதாபம்

 பெங்களூரில் யானை தாக்கி முதியவர் பலி நடை பயிற்சிக்கு சென்றபோது பரிதாபம்


ADDED : செப் 29, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெங்கேரி: நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதியவரை, காட்டு யானை தாக்கி கொன்றது. பெங்களூரின் பரபரப்பான பகுதியில் இச்சம்பவம் நடந்திருப்பது, மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

பெங்களூரு கெங்கேரி அருகில் மைசூரு சாலையின் அஞ்சேபாளையாவில் வசித்தவர் நாகராஜ், 60.

இவர் நேற்று அதிகாலை 5:30 மணியளவில், ஆர்.ஆர். மருத்துவ கல்லுாரி பின் பகுதியில், நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த காட்டு யானை, அவரை தாக்கியது. அவர் தப்பியோட முயற்சித்தும் முடியவில்லை.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர், மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, நாகராஜ் உயிரிழந்தார்.

அஞ்சேபாளையா மற்றும் சுற்று பகுதிகளில், வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பது தெரிந்தும், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்த போது, யானை ஓடும் காட்சி பதிவாகியிருந்தது.

குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை புகுந்ததால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:

இச்சம்பவம் கக்கலிபுரா வன மண்டல எல்லையில் நடந்துள்ளது. பன்னரகட்டா பகுதியில் இருந்து யானை வந்திருக்கலாம் என, நினைக்கிறோம். சம்பவ இடத்துக்கு சென்றுள்ள வனத்துறை அதிகாரிகள், யானையை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வரும் நாட்களில், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். யானை தாக்கி இறந்த நாகராஜின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரும்பு லாரி சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், சாம்ராஜ் நகர் மற்றும் தமிழக எல்லையில், ஆசனுார் அருகில் நேற்று காலை கரும்புகள் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது காட்டு யானைகள் கூட்டமாக வந்து, வழி மறித்தன. லாரியின் பின்னால் வந்த மற்ற வாகனங்கள், யானைகளை கண்டு பீதியடைந்து சற்று தொலைவிலேயே, வாகனத்தை நிறுத்தினர்.

லாரி ஓட்டுநர் சிறிது நேரம், லாரியை நிறுத்தினார். கரும்புகளை தின்றுவிட்டு, யானைகள் அங்கிருந்து வனத்துக்குள் சென்றன.

வாகன பயணியர் நிம்மதி அடைந்த நிலையில், அதே பகுதியில் பெரிய சிறுத்தை, சாலையை கடந்து சென்றது. வாகன பயணியர் சிலர், யானைகளையும், சிறுத்தையையும் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

நெடுஞ்சாலை அருகிலேயே, காட்டு யானைகளும், சிறுத்தையும் நடமாடுவதால், வாகன பயணியரும், அப்பகுதியினரும் பீதி அடைந்துள்ளனர். அந்த வழியாக செல்லவே தயங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us