ADDED : செப் 29, 2026 03:38 AM

பீன்யா: இரு கும்பலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ரவுடி கத்தியால் குத்தி கொலை செய்யப் பட்டுள்ளார்.
பெங்களூரு நந்தினி லே - அவுட்டைச் சேர்ந்தவர் தீபக் என்ற தீபு, 28. ரவுடியான இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது.
கடந்த 25ம் தேதி இரவு பீன்யா குல்பர்கா காலனியில், தீபக், அவரது குழுவை சேர்ந்த ரவுடி கும்பலுக்கும், பீன்யாவின் ஈஸ்வர், அவரது குழுவின் ரவுடி கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
ஒருவரையொவருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பின், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நேற்று முன்தினம் மீண்டும் குல்பர்கா காலனி பகுதிக்கு தீபக் சென்றார். ஈஸ்வர், அவரது கும்பல், தீபக்கிடம் தகராறு செய்ததுடன், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.
உயிருக்கு போராடிய தீபக், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். தலைமறைவாக உள்ள ஈஸ்வர், அவரது கும்பலை, பீன்யா போலீசார் தேடுகின்றனர்.
