sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிர் பிழைத்தார்

/

 இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிர் பிழைத்தார்

 இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிர் பிழைத்தார்

 இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிர் பிழைத்தார்


ADDED : மார் 09, 2026 06:08 AM

Google News

ADDED : மார் 09, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: இறந்ததாக கருதப்பட்ட முதியவர், இறுதி சடங்குக்கு கொண்டு செல்லும் போது உயிர் பிழைத்தார்.

பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவில் வசிப்பவர் முபாரக் அவடி, 65. சமீப நாட்களாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட இவர், பெலகாவியின் கே.எல்.இ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல், இரண்டு நாட்களுக்கு முன், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

அதன்பின் குடும்பத்தினர், முதியவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உடலை வாகனத்தில் கொண்டு செல்லும் போது, வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது முபாரக் அவடியின் உடல் அசைந்தது. மூச்சு விடத் துவங்கினார்.

தொடர்ந்து, குடும்பத்தினருடன் பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அவர் தற்போது விஜயபுராவில் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெறுகிறார். அவர் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us