/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலியல் தொல்லை முதியவருக்கு 3 ஆண்டு சிறை
/
பாலியல் தொல்லை முதியவருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : செப் 18, 2025 07:48 AM
கோலார் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து கோலார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோலார் சாக்காரசன ஹள்ளி கிராமத்தின் முனி சாமப்பா, 61. அதே கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக கோலார் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர்.
'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குற்றம் நடந்தது நிரூபிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.பிரசாத், குற்றவாளியான முனிசாமப்பாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,௦௦௦ ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.