/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை எவ்வளவு?
/
எஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை எவ்வளவு?
ADDED : செப் 18, 2025 07:48 AM

விஜயபுரா : விஜயபுரா எஸ்.பி.ஐ., வங்கியில் நேற்று முன்தினம், ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 20 கோடி ரூபாய் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி கூறி உள்ளார்.
விஜயபுரா சடசனா பண்டரபுரா சாலையில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த கொள்ளையர்கள் நகைகள், பணத்தை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பினர்.
இதுதொடர்பாக விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி நேற்று அளித்த பேட்டி:
வங்கி அதிகாரி, ஊழியர்கள் அளித்த புகாரின்படி, ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 20 கோடி ரூபாய் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை கைது செய்ய, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வங்கியின் 425 லாக்கர்களில் நகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 250க்கும் மேற்பட்ட லாக்கர்களில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் எடுத்துள்ளனர். வங்கி மேலாளர், ஊழியர்களை மிரட்ட நாட்டு துப்பாக்கியால், வங்கிக்குள் ஒரு முறை சுட்டுள்ளனர்.
வங்கிக்குள் கிடந்த புல்லட்டை கைப்பற்றி உள்ளோம். கொள்ளையடித்து விட்டு இரண்டு கார்களில் தப்பி உள்ளனர். ஒரு கார் மஹாராஷ்டிராவின் பந்தர்புரா கிராமத்தில், பைக் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
காரை ஓட்டிச் சென்றவர் நகை, பணம் இருந்த மூட்டையை எடுத்துவிட்டுத் தப்பினர். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பொருத்தப்பட்ட பதிவெண் நம்பர் போலி என்று தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்கி லாக்கரில் நகைகளை வைத்திருந்தவர்கள், நேற்று காலை வங்கி முன் போராட்டம் நடத்தினர். கொள்ளையர்களிடம் இருந்து எப்படியாவது நகை, பணத்தை மீட்க வேண்டும் என, சிலர் கண்ணீர் விட்டனர்.