sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தொண்டை மண்டல முதலியார் சங்க நிர்வாகிகள் தேர்வு

/

 தொண்டை மண்டல முதலியார் சங்க நிர்வாகிகள் தேர்வு

 தொண்டை மண்டல முதலியார் சங்க நிர்வாகிகள் தேர்வு

 தொண்டை மண்டல முதலியார் சங்க நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜன 11, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக மாநில தொண்டை மண்டல முதலியார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநில தொண்டை மண்டல முதலியார் சங்கம், 1997 ல், தற்போதைய பெங்களூரு தமிழ் சங்கத்தின் நிர்வாகிகளான தஞ்சாவூர் தனராஜ், கீதாஞ்சலி, பெங்களூரு சிங்காரம், திருச்சி சுந்தரேசன், கோயம்புத்துார் லட்சுமணன், சேலம் சுகுமாறன், ஜெயநகர் கோவிந்தன், பாலகுருசாமி ஆகியோரால் துவக்கப்பட்டது.

அன்று முதல் இச்சமுதாய மக்கள் நலனுக்காக, பல்வேறு பணிகளில் சங்கம் ஈடுபட்டு வருகிறது. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். 2018க்கு பின், பல்வேறு காரணங்களால், புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கவில்லை.

இந்நிலையில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சிவன் ஷெட்டி கார்டன் ருக்மணி காலனியில் உள்ள முதலியார் சங்க அகாடமியில் நேற்று நடந்தது. சங்கத்தின் புதிய தலைவராக தீனதயாளன் முதலியார், செயலராக தனராஜ் முதலியார், பொருளாளராக ரவிச்சந்திரன் முதலியார் மற்றும் ஒன்பது செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், தமிழக தொண்டை மண்டல முதலியார் சங்க செயலர் சுகுமாறன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சுப்பையா, காஞ்சி மடத்தின் தொண்டை மண்டல சீடர் சங்கத்தினர் என, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us