7 எம்.எல்.சி., பதவிகளுக்கு நாளை தேர்தல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ரிசார்ட்டில் அடைப்பு
7 எம்.எல்.சி., பதவிகளுக்கு நாளை தேர்தல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ரிசார்ட்டில் அடைப்பு
ADDED : ஜூன் 17, 2026 01:07 AM
பெங்களூரு: கர்நாட க மேல்சபையில் காலியாகும் ஏழு எம்.எல்.சி., இடங்களுக்கு எட்டு பேர் போட்டியிடுவதால், நா ளை பெங்களூரு விதான் சவுதாவில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஓட்டு போடுவது எப்படி என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ரிசார்டில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
கர்நாடக எம்.எல்.சி.,க்களான ம.ஜ.த.,வின் கோவிந்தராஜ், காங்கிரசின் நசீர் அகமது, ஹரிபிரசாத், திப்பண்ணா, பா.ஜ.,வின் எம்.டி.பி.,நாகராஜ், பிரதாப் சிம்ஹா நாயக், சுனில் வல்யாபுரே ஆகிய ஏழு பேரின் பதவி காலம், இம்மாதம் 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
காலியாகும் இந்த ஏழு இடங்களுக்கு எட்டு பேர் போட்டியிடுவதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, பெங்களூரு விதான் சவுதாவில் நாளை தேர்தல் நடக்கிறது.
29 எம்.எல்.ஏ.,க்கள் இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு, எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்வர். ஒரு எம்.எல்.சி.,யை தேர்வு செய்ய 29 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு தேவை.
காங்கிரசுக்கு இருக்கும் 136 எம்.எல்.ஏ.,க்கள் பலத்தில், அவர்களால் நான்கு இடங்களில் வெற்றி பெற முடியும். ஆனால் ஐந்தாவது இடத்திற் கும் அவர்கள் வேட்பாளரை களம் இறக்கி உள்ளனர்.
தனது எம்.எல்.ஏ.,க்கள் பலத்தில் பா.ஜ., வெற்றி பெறும் இரு இடத்திற் கு அக்கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது. 18 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள ம.ஜ.த.,வும் ஒரு இடத்திற்கு வேட்பாளரை நிறுத்தி உள்ளது. ஏழு இடத்திற்கு எட்டு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஐந்தாவது இடத்திற்கு காங்கிரஸ், ம.ஜ.த., இடையி ல் போட்டி எழுந்துள்ளது. எம் .எல்.ஏ.,க்கள் குறுக்கு ஓட்டு போட வைப்பதன் மூலம் வெற்றி பெறலாம் என, இரு கட்சிகளும் நினைக்கின்றன.
இந்நிலையில் ம.ஜ.த.,விடம் விலை போய் விட கூடாது என்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ராம்நகரின் பிடதியில் உள்ள ரிசார்ட்டிற்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். முதல்வர் சிவகுமார் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
முன்னாள் முதல் வர் சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் முறை காங்கிரசில் முதல் முறையாக எம்.எல்.ஏ.,க்களாக ஆனவர்களுக்கு, எம்.எல்.சி., தேர்தலில் எப்படி ஓட்டு போட வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஓட்டு போடுவது குறித்து மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பயிற்சி அளித்தனர். எந்த வேட்பாளருக்கு யார் ஓட்டு போட வேண்டும் என்றும் எடுத்து கூறினர்.
எம்.எல்.ஏ.,க்கள் நடவடிக்கையை கண்காணிக்கவும், அவர்கள் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காகவும் தனி பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தேர்தல் ஓட்டு சீட்டு முறையில் நடக்கும் என்பதால், எம்.எல்.ஏ.,க்கள் சிறிய தவறு செய்தால் கூட, கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட் பாளர்கள் தோற்று போகவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டு பதிவு முடிந்தவுடன், எண்ணிக்கை அன்று மாலை துவங்க உள்ளது. இரவு முடிவுகள் வெளியாகும்.
