ADDED : ஜூன் 17, 2026 01:07 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: ''அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கெம்பேகவுடா ஜெயந்தியை கொண்டாட தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
கெம்பே கவுடா எந்த சமுதாயத்தையும் சேர்ந்தவர் கிடையாது. அனைவருக்கும் அவர் பொதுவானவர்.
மாநிலம் முழுதும் வரும், 27ம் தேதி கெம்பே கவுடா ஜெயந்தி கொண்டாடப்படும். பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கெம்பே கவுடா லே - அவுட்டில் விழா கொண்டாடப்படும்.
பெங்களூரின், 369 வார்டுகளில் விழாவை நடத்த, தலா 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இது போல, 224 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
