/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஜி.பி.ஏ., அமலுக்கு வந்ததும் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்'
/
'ஜி.பி.ஏ., அமலுக்கு வந்ததும் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்'
'ஜி.பி.ஏ., அமலுக்கு வந்ததும் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்'
'ஜி.பி.ஏ., அமலுக்கு வந்ததும் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்'
ADDED : ஜூன் 19, 2025 11:33 PM
பெங்களூரு: ''அடுத்த நான்கு மாதங்களில் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நடைமுறைக்கு வந்த பின், ஐந்து மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் எல்லை நிர்ணயம் குறித்து, அதிகாரிகளுடன் துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு பின், அவர் கூறியதாவது:
அடுத்த நான்கு மாதங்களில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நடைமுறைக்கு வரும். அதன் பின், பெங்களூரில் ஐந்து மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்படும். அதன்பின், ஜி.பி.ஏ.,வின் எல்லை நிர்ணயிக்கப்படும்.
பெங்களூரில் தற்போது இருக்கும் பிரச்னைகள் குறித்து, மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டு, நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைந்தால், சட்டப்படி ஏழு மாநகராட்சிகளை உருவாக்கலாம். ஆனால், பெங்களூரு நகர், ஐந்து மாநகராட்சியாக பிரிக்கப்படும். அதன் பின் தேர்தல் நடத்தப்படும்.
மீதமுள்ள இரண்டு மாநகராட்சி, பெங்களூரு புறநகர் பகுதியில் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டியில் விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.