தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தேர்தல்! மேல்சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு இன்று...

தேர்தல்! மேல்சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு இன்று...

தேர்தல்! மேல்சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு இன்று...


UPDATED : அக் 23, 2026 04:30 AM

ADDED : அக் 22, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 04:30 AM ADDED : அக் 22, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள மேற்கு பட்டதாரி தொகுதி, தென்கிழக்கு பட்டதாரி தொகுதி, வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, பெங்களூரு ஆசிரியர் தொகுதி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இந்த தேர்தலை பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கட்சிகள் இணைந்து சந்திக்கின்றன. பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் ம.ஜ.த.,வும், மற்ற மூன்று தொகுதிகளில் பா.ஜ.,வும் களம் காண்கின்றன.

தென்கிழக்கு பட்டதாரி தொகுதியில் பா.ஜ.,வின் கே.எம்.சுரேஷ் - காங்கிரசின் சஷி ஹுலிகுண்டேமட்; மேற்கு பட்டதாரி தொகுதியில் பா.ஜ.,வின் எஸ்.வி.சங்கனுார் - காங்கிரசின் மோகன் லிம்பிகே; வட கிழக்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜ.,வின் சஷில் நமோஷி - காங்கிரசின் ஷரணப்பா மத்துார், பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் ம.ஜ.த.,வின் ஏ.பி.ரங்கநாத் - காங்கிரசின் புட்டண்ணா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், பெங்களூரை தவிர மற்ற மூன்று தொகுதிகளுமே பா.ஜ., வசமே இருந்தது.

திட்டம்



இத்தேர்தலில், மூன்று தொ குதிகளையும் தக்க வைத்து கொண்டு, பெங்களூரு தொகுதியையும் சேர்த்து வென்றிட வேண்டுமென பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. அதுபோல, பெங்களூரு தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, மற்ற மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

இதில், யாருடைய திட்டம் வெற்றிபெறும் என்பது வரும் 27ம் தேதி, தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

இன்று காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தேர்தல் பொதுத்தேர்தல் போல அனைவராலும் ஓட்டு போட இயலாது. இதில், தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்த ஆசிரியர்கள், பட்டதாரிகளால் மட்டுமே ஓட்டு போட முடியும். படித்தவர்கள் ஓட்டளிப்பதால் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் புட்டண்ணா, ஓட்டுக்கு பரிசு கூப்பன், பணம் தருவதாக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். அதுபோல, பா.ஜ., மீதும் காங்கிரசார் குற்றம்சாட்டியுள்ளனர். பணம் விளையாடுவதாக கட்சிகள் கூறியுள்ளன.

இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா ஓட்டுக்கு பணம் கொடுத்து உள்ளார். அவர், 5,000 ரூபாய்; 10,000 ரூபாய்; 15,000 ரூபாய் மதிப்பு கொண்ட பரிசு கூப்பன்களை விநியோகித்தார்.

இந்த பரிசு கூப்பன்களில், இனிய தசரா என எழுதப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள ரகசிய எண்களை மால்களில் காண்பித்தால், கூப்பனில் உள்ள தொகைக்கு ஏற்ப பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்க், பக்கெட், டிபன் பாக்ஸ் போன்றவை ஆசிரியர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதில், 17 வட்டார கல்வி அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு. அவர்கள் மூலமாகவே ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. இவ்விஷயத்தில் கல்வி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது கேவலமானது.

சில அதிகாரிகள் புட்டண்ணாவின் வீட்டில் ரகசிய சந்திப்பு நடத்தினர். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. நேரம் வரும்போது அனைத்தும் வெளியிடப்படும்.

ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுத்து எம்.எல்.சி.,யாக நினைப்பது சரியா. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்துகிறது. ஆளும் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஆசிரியர்கள் மிரட்டப்படுகின்றனர்.

இதே போன்று, குறுக்கு வழிகளை மற்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கையாளுகிறது. இது குறித்து, உத்தமர்கள் போன்று பேசும் காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக பதிலளிக்கவும். அவர்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதுபோல, காங்கிரசாரும், பா.ஜ.,வினர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us